
தமிழக அரசு ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை விடுவித்துள்ள நிலையில், அதானி நிறுவனம் மிகக் குறைந்த அளவிலான தொகையை குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு அதானி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மின்மீட்டருக்கான சர்வதேச கொள்முதல் டென்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
அதாவது அதானி மீது ஊழல் புகார் இருப்பதால் அவருக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வழங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது கொள்முதல் டென்டரை ரத்து செய்வதாக தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விவசாய இணைப்புகள் தவிர மற்ற அனைத்து இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.