அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் பிரபல பணக்காரர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சோதனையின் போது ஸ்டார் ஷிப் 36 என்ற ராக்கெட் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் அந்த பகுதியில் பெரும் தீபிழம்பு ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மேலும் அந்த ராக்கெட் வெடித்து சிதறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.