
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் சாலையை திடீரென கடக்க முயன்றார். இதனால் முதலமைச்சரின் வாகனம் விபத்தில் சிக்கியது. வாமனபுரம் பூங்கா சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் முதலமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.