கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இந்நிலையில் கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிய வழக்கில் திருவிழாக்களின் போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளூர் விடுமுறை விடவும் டாஸ்மாக் கடைகளை மூடவும் யாருக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஏதேனும் அரசாணை உள்ளதா என்பதை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.