மக்களவை தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.

மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக. இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடைபெற உள்ள இந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

விழுப்புரம் தொகுதியில் வேட்பாளராக மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் மீண்டும் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். சிதம்பரம் தொகுதியில் 6வ முறையாக போட்டியிடுகிறேன். இம்முறை என்னை நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பர் என தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் இதே தொகுதியில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்..