விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசினார். அதன் பிறகு அவர் கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமாவளவன் அவரை ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்தார். அதன் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமா ஆதவ் அர்ஜுனா அமைதியாக இருக்க வேண்டும். அவர் பேசுவதை பார்க்கும்போது அவர் பிளான் வேறு ஏதோ இருக்கிறது என்பதை நன்றாக தெரிகிறது.

தொடர்ந்து இப்படி பேசினால் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது தான் பேசக்கூடிய கருத்துகளால் திருமாவளவனனுக்கும் தனக்கும் இடையே விரிசல் ஈடுபடுவதை விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதோ ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை,