
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் 20 சுற்று முடிவில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் அபிநயா 10,479 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும் இதன் மூலம் விக்கிரவாண்டி தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.