
வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. இவருடைய அவாமி லீக் கட்சிக்கு தற்போது வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் அவர் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு நாட்டை விட்டு அவர் வெளியேறிய நிலையில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டது. கடந்த வருடம் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக அந்த கட்சிக்கு தடை விதித்துள்ளனர்.
அதாவது அந்த கட்சி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக கூறி முகமது யூனிஸ் தலைமையிலான அரசு ஒட்டுமொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு பிடிவாரண்டு பிறப்பித்துள்ள நிலையில் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்கு வகித்த கட்சியை தடை செய்தது சட்டவிரோதம் என அந்த கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.