
மத்திய கிழக்கு மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டாணா புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 25ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் பூரி, சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலினால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.