கடலூர் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைகளில்ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஓட்டுநர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லாரிகளை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறி வைத்து அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை ஒரு கும்பல் பறித்து விட்டு சென்றுள்ளது.

அவர்கள் சாலை ஓரம் தனியாக ஓய்வெடுக்கும் லாரி டிரைவர்களை குறி வைத்து இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர செயலில் இருசக்கர வாகனங்களில் வரும் வாலிபர்கள் ஈடுபடுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் லாரி  ஓட்டுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.