சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது,  கீழடி அருங்காட்சியகம் நிர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு செய்து கண்டெடுக்கப்பட்ட புதைப் பொருட்களை காட்சிப்படுத்த திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி மலைக்கு அருகில் 13 ஏக்கர் நிலத்தில் ரூ.33 கோடி திட்ட மதிப்பில், “பொருநை அருங்காட்சியகம்” கட்டப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் புதியதாக சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

கலைஞர், 1974ல் கட்டிய கலைச் சின்னமான வள்ளுவர் கோட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதித்துள்ள 80 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். ரூ.290 கோடி மதிப்பீட்டில், தரைதளம், ஏழு மேல்தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட அறிவியல் அரங்கம் மற்றும் நூலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறியுள்ளார்.