2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அவ்வகையில், பாரம்பரிய மருத்துவம் அதிகரித்துள்ளதால் மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500 கோடி நிதி ஒதுக்கீடு, முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த இயற்கை இடுபொருள் செயல் விளக்கம் அமைக்க 3.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.