
பாஜக கட்சியின் பிரமுகர் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை ராஞ்சனா நாச்சியார். இவர் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய போது அவர்களை கீழே இறக்கி விட்டு அடித்ததோடு, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசினார். தான் ஒரு போலீஸ் என கூறி படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை நாச்சியார் அடித்ததோடு அவர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் அவரை பலரும் அறிந்தார்கள். இவர் பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை நாச்சியார் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்குமாறு கூறுவதால் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் பாஜகவினர் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது அந்த கட்சியின் நிர்வாகி ஒருவரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.