
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே திமுக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது அதிமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி மாநிலங்களவைத் தேர்தலில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இன்ப துரை மற்றும் முன்னாள் எம்எல்ஏ செங்கல்பட்டு தனபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் இந்த அறிவிப்பை அதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.