
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். 12-ம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நீட் UG தேர்வு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி மே மாதம் 4-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு இன்று முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி இரவு 11.50 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
