
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்ற 37 வயது நபர் கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் நிலையில் இவர் மீது பாலியல் புகார் வந்தது. அதாவது கடந்த வருடம் மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு 17 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் கலந்து கொண்ட நிலையில் அந்த சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது.
அந்த புகாரின் படி போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தலைமறை வாகிவிட்டார். இந்நிலையில் அவர் பெங்களூருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வெளிவந்த நிலையில் அவரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தற்போது அவருக்கு வருகிற 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர் ஒருவரது வீட்டில் பதுங்கி இருந்த அவரை நேற்று நள்ளிரவில் போலீசார் கைது செய்த நிலையில் தமிழகம் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.