ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிசோடியா இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். 8 மணி நேரமாக நடந்த விசாரணையை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.