நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்கள் அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. மக்களவையில் 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் யாரும் எதிர்க்கவில்லை.