
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். ஜனவரி 23ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் நிலையில் இதற்காக நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது என்றும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1.14 கோடி பெண்களுக்கு இன்றே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டு விடும் என்று தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் நிலையில் இந்த முறை பொங்கல் டபுள் ட்ரீட்டாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை என அதிரடியான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.