புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி. இதேபோன்று மதுரையைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான். இவர்கள் இருவருக்கும் தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதில் தட்சிணாமூர்த்தி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தவில் வாசித்துள்ளார்.

இதேபோன்று வேலு ஆசான் பறை இசைக் கலையை உலகிற்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர். இவர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்மஸ்ரீ விருது பெரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் என்பது தற்போது குவிந்து வருகிறது.