பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக தற்போது தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக அவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கெலாட் அறிவித்துள்ளார். மேலும் ஆர் ஜே டி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராகவும் VIP கட்சித் தலைவர் முகேஷ் சகானி துணை முதலமைச்சர் வேட்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.