
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். பஞ்சாபை சேர்ந்த இவர் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து வருகிறார்.இவர் கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட் தனக்கு முதல்வராவதற்கு கூட வாய்ப்பு வந்ததாகவும்ஆனால் மக்களுக்கு உதவி செய்ய அரசியல் தேவை இல்லை என்பதால் அந்த பதவியை நான் தான் ஏற்கவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா என்பவரிடம் நடிகர் சோனு சூட் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை. மேலும் இதன் காரணமாக தற்போது அவருக்கு பிடிவாாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.