
பிரபல பின்னணி பாடகி கல்பனா. இவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங் ஜிக்கா, ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ஜிகிரு ஜிகிரு போன்ற பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் தற்போது அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.