தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மாபெரும் ஹிட் அடித்தது. இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர். இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.‌

இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகங்கை அருகே நடந்த ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கங்கை அமரன் சென்ற நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிவடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரையில் உள்ள அதே தனியார் ஹாஸ்பிட்டலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.