
டெல்லி முன்னாள்அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நேற்று கட்சி அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ஒரே நாளில் டெல்லி பாஜக அலுவலகத்தில் வைத்து கைலாஷ் பாஜகவில் இணைந்து விட்டார். இதனால் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.