
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதாவது அவர்கள் பீரங்கி தாக்குதல் நடத்திய நிலையில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி, ஷாபூர் மற்றும் மன்கோட் ஆகிய இடங்களிலும், ரஜௌரி மாவட்டத்தில் லாம், மஞ்சகோட் மற்றும் கம்பிர் பிரம்மணா ஆகிய இடங்களிலும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.