ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

அட்டாரி- வாங்க எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அந்நாட்டின் வழியாக மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.