பழம்பெரும் பிரபல தமிழ் நடிகர் ஜி. சீனிவாசன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு 95 வயது ஆகும் நிலையில் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

இவர் 8 படங்களுக்கு கதை எழுதிய நிலையில், 3 படங்களை இயக்கியுள்ளார். இவர் முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீ ராகவேந்திரா, ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட பல தமிழ் படங்கள், தெலுங்கு மற்றும் மலையாளம் என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா. இவர்களது மகன் சில வருடங்களுக்கு முன்பாக விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது நடிகரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் நாளை வைக்கப்படுகிறது. மேலும் இதை தொடர்ந்து அவரது உடல் ஏவிஎம் மின் மயானத்தில் கவனம் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.