பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என வலியுறுத்திய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்காக அங்கு விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி கொடுத்துள்ளார். அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்களை விஜய் நேரில் சந்தித்து நாளை இருக்கிறார். விஜய் பொது மக்களை  சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காவல்துறை தேர்வு செய்த 2 இடங்களில் ஒரு இடத்தில் தான் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட கூட்டத்தை தவிர அங்கு கூட்டம் கூட கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பரந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் விஜய் பொதுமக்களை சந்திக்கிறார். ஆனால் விஜய் அம்பேத்கர் திடலில் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்பிஐ சந்தித்து புஸ்ஸி ஆனந்த் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும்  இதற்கு ஒப்புதல் தராவிடில் விஜய் பொதுமக்களுடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.