
பிரபல திரைப்பட இயக்குனர் சியாம் பெனகல். இவருக்கு 90 வயது ஆகும் நிலையில் சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் இன்று மாலை உயிரிழந்ததாக தற்போது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவர் கடந்த 14ஆம் தேதி தான் தன்னுடைய 90 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவர் மன்தன், ஜூபைதா, சர்தார் இபேகம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ள நிலையில் இவருடைய மறைவுக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.