
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.