
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.