
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்கள் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.