நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு பல மாவட்ட செயலாளர்கள், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட பலர் அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள்.

இது தொடர்பாக சீமானிடம் கேட்கும்போது அவர் நாம் தமிழர் கட்சிக்கு இது களை உதிர் காலம் என்று கூறினார். இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.