சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்கள் இனி தனியார் மருத்துவமனைகளில் 7 நாட்களுக்கு 1.50 லட்சம் வரை பணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

2030-க்குள் விபத்து இறப்புகளை 50% குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே போல தமிழ்நாட்டில் “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” கடந்த ஆண்டு முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.