நாடாளுமன்றத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதால் உள்துறை மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று பாஜக கட்சியின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

அதாவது அவர் படிக்கட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் மீது விழுந்த எம்பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளினார். அப்போது பாஜக எம்பி கீழே விழுந்ததில் அவருடைய மண்டை உடைந்துவிட்ட நிலையில் அவருக்கு ரத்தம் வருகிறது. மேலும் கீழே விழுந்த எம்பியும் ராகுல் காந்தியை ஒருவரை தள்ளியதில் தான் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இவர் தன்னை எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுத்ததாகவும் தன்னை கீழே தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.