தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தன்னிடம் கேட்காமல் ஜெயம் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் அவரிடம் தான் பலமுறை பேச முயற்சி செய்தும் தனக்கு பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜர் ஆனார்.

ஆர்த்தி காணொளி வாயிலாக ஆஜரானார். கடந்த 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருமண பதிவை ரத்து செய்வதோடு தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தருமாறு ஜெயம் ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் இன்றே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கேட்கும் நிலையில் ஆர்த்தி விவாகரத்து செய்ய ஏற்கனவே மறுத்துள்ளதால் முடிவு என்னவாகும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.