
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் எம்புரான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் இந்து மதத்திற்கு எதிராக இருப்பதாக ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டிய நிலையில், முல்லை பெரியாறு அணை உடைந்தால் கேரளா அழியும் என்ற காட்சி படத்தில் அமைந்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தமிழக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.
படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் இன்று அந்த சோதனை நிறைவடைந்தது. இதைதொடர்ந்து தற்போது நடிகர் பிரித்திவிராஜ்க்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதாவது கோல்ட், ஜன கன மன மற்றும் கடுவா ஆகிய மூன்று திரைப்படங்களில் துணை தயாரிப்பாளராக பிரித்விராஜ் இருந்த நிலையில் கணக்கு விவரங்கள் தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அவர் இணை தயாரிப்பாளராக இருந்தபோது 40 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.