தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு இருபது ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6645 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது. அதேபோலவே வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 88 ரூபாய்க்கும் ஒரு கிலோ 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.