
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 20 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் காப்பர் கழிவுகள், ஜிப்சம் ஆகியவற்றை நீக்கம் செய்யாதது தான் அந்த ஆளை மூடப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பின்னர் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மேலும் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ஆலையை மூடியது மூடியதுதான் என்று அதிரடியாக உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.