தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜயின் பெற்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் முதலில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தீர்மானம்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம்.

தொகுதி மறு சீரமைப்பு மற்றும் இரு மொழி கொள்கை தொடர்பாக தீர்மானம்.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம்

சமூக நீதியை நிலை நாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புகளை ஆய்வு நடத்த வேண்டும்.