தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்கு கல்வி உதவித்தொகை 1000 ரூபாய் கிடைக்கும் ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் புயல் காரணமாக பாதிப்படைந்ததால் ஊரகத் திறனாய்வு தேர்வினை ஒத்திவைப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட ஊடகத் திறனாய்வு தேர்வு எப்போது நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது.