சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற  அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதன் காரணமாக தற்போது அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் முன்னதாக இந்த விவகாரத்தில் ஞானசேகரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடைபாதையில் பிரியாணி கடை ‌ வைத்து நடத்தி வரும் நிலையில் தினசரி கடை முடிந்த பிறகு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி வீடியோ எடுத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார். இவர் மீது ஏற்கனவே இது போன்ற வழக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பதிவான நிலையில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இவர் காவல்துறையினிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது இடது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்ட மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.