தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்திற்கும் கிருஷ்ணகிரியில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை காரணமாக விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரியிலும் என்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.