
தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதாவது கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை மாற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் உறுதிப்படுத்தி விட்டதால் ஜூன் 2-ல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. மேலும் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட நிலையில் இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தேதியையும் உறுதிப்படுத்தியுள்ளார்