வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கனமழை எதிர்ரொலியாக தற்போது அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுமுறை அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று 6 முதல் 9-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வுக்கான தேவி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கன மழை எதிரொலியாக

சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கரூர், திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர்  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் திருநெல்வேலியில் இன்று தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.