மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் பயங்கரமாக அவர்கள் மீது  மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் என 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குஞ்சாம்பட்டி பகுதியில் நடந்த இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.