
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கடலூரில் பாமக நிர்வாகியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரம மாறியாக வெட்டியுள்ளனர். அதாவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சூரப்ப நாயக்கன் சாவடியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் பாமக கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடலூர் நகர தலைவராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிவசங்கரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிவசங்கர் உயிருக்கு போராடும் நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.