ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா ஆரம்பம் முதலில் சொதப்பிய நிலையில் நேற்று ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் சரியான முறையில் விளையாடதால் அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஐந்தாம் நாள் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் டெஸ்ட் தொடர்களில் இருந்து ரோஹித் சர்மா விலகியதாக சமீப காலமாகவே செய்திகள் பரவி வரும் நிலையில் தொடர்பாக தற்போது ரோகித் விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது நான் இன்னும் ஓய்வு பெறவில்லை. இந்த போட்டியில் இருந்து மட்டும்தான் விலகியுள்ளேன். நான் இப்போது சரியாக விளையாடாமல் இருக்கலாம். ஆனால் அதுவே இனியும் தொடராது என்று கூறினார். மேலும் பும்ராவின் கேப்டன்ஷிப் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் ரோகித் கூறியுள்ளார்.