சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மிரட்டல் வந்தவுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் போலீசாரும் விரைந்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். மிரட்டல் விடுத்த நபர்களையும் கைது செய்கின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் தமிழ்நாடு இல்லத்திலிருந்து விருந்தினர்கள், ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.